சென்னை: சில்வர் ஸ்கிரீன் டிஜிட்டல் இந்தியா பேனரில் காஜா மைதீன் – ஷாகுல் அமீது தயாரித்துள்ள படம் ‘தி பெட்லர்’. பிரபு சதீஷ், ஐஸ்வர்யா (அறிமுகம்) ஸ்ரீமன், சோனியா போஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அமீன் ஒளிப்பதிவும், மதுசூதனன் இசையும், கார்த்திக் படத்தொகுப்பும் செய்கிறார்கள்.

பிரபு சதீஷ் இப்படத்தை எழுதி, நடித்து, இயக்குகிறார். படம் பற்றி அவர் பேசுகையில், “இன்றைய இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர். இந்த போதைப்பொருள் எங்கிருந்து வருகிறது? இளைஞர்களுக்கு இந்த போதைப்பொருள் யாரிடம் இருந்து வருகிறது?
இதனால் தனி குடும்பம் மட்டுமின்றி சமூகமும் எப்படி சீரழிகிறது? இதிலிருந்து இளைஞர்களை எப்படி மீட்பது?” என ஆக்சன், க்ரைம் படமாக தயாரித்து வருகிறேன்.