புதுடில்லி: மீண்டும் தனது பழக்கத்தை காட்டியுள்ளது பாகிஸ்தான். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 28 அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், பாகிஸ்தானின் திட்டமிடப்பட்ட கொடுஞ்செயல் என இந்தியா கண்டிக்கிறது. பாகிஸ்தான் தன்னுடைய பயங்கரவாத வேடத்தை மறைக்க முயல்கிற போதிலும், உலகமே உண்மையை அறிந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானே நேரடியாக காரணம் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், அப்பாவியாக நடிக்கிறது அந்த நாடு. இதற்குப் பதிலடி அளிக்க இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எல்லை மூடல், பாகிஸ்தானிய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்தல், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியரை நாடு கடத்துதல் போன்றவை அதற்கான ஆரம்ப கட்டமாக பார்க்கப்படுகின்றன.
இந்த நடவடிக்கைகள் போதாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதிகளை மீட்கும் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மற்றொரு கோரிக்கை.
பாகிஸ்தானுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியங்கள், காய்கறிகள், ஆடைகள் மற்றும் தொழிற்பொருட்களை நிறுத்தி, பொருளாதார பாய்ச்சலை ஏற்படுத்த வேண்டும் என்றோமும், பாகிஸ்தானுக்குள் இருந்து இந்தியாவை எதிர்த்து பேசும் எவரையும் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றோமும் பல கோரிக்கைகள் எழுந்துள்ளன.
அத்துடன், பாகிஸ்தானிலிருந்து தனி நாடு கோரி போராடும் பலுசிஸ்தானுக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்துகிறார்கள். இது பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி ஆகும் என்கிறார்கள்.
இந்திய மக்களிடையே இந்த தாக்குதல் பெரும் கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பல வருடங்களாக தினமலர் வாசகர்களாக உள்ளோர், பாகிஸ்தானின் இந்த மனிதாபிமானமற்ற செயலை கண்டித்து, தங்கள் எண்ணங்களை பகிர்ந்துள்ளனர்.
வாசகர்களும், நாட்டின் பாதுகாப்பு குறித்து தங்களுடைய கருத்துகளை பதிவு செய்யலாம். உங்கள் கருத்துகள் அரசின் கவனத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. தற்போது, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா தரும் பதில், உலக நாடுகளின் கவனத்தையும், ஆதரவையும் பெறும் என்ற நம்பிக்கையில் நாடு உள்ளது.