சென்னை: தமிழகத்தில் வீடுகள் உட்பட அனைத்து பிரிவினருக்கான மின் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் வீடுகளுக்கான மின் கட்டணம் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது.
அதன் விவரம்:
அதிக மின் நுகர்வு கொண்ட முக்கிய மாநிலங்களில்
மாநிலம்/ அலகுகள் – 100 – 200 – 300 – 400 – 500 – 600 – 700 – 800 – 900 – 1000
தமிழ்நாடு – கட்டணம் இல்லை – 235 – 705 – 1,175 – 1,805 – 2,880 – 3,825 – 4,770 – 5,820 – 6,870
கர்நாடகா – 846 – 1,662 – 2,508 – 3,114 – 3,960 – 4,806 – 5,652 – 6,258 – 7,344 – 7,950
கேரளா – 415 – 880 – 1,440 – 2,215 – 3,065 – 4,190 – 5,425 – 6,430 – 7,510 – 8,300
தெலுங்கானா – 215 – 545 – 1,220 – 1,700 – 2,890 – 3,680 – 4,600 – 5,500 – 6,490 – 7,440
மேற்கு வங்காளம் – 594 – 1,324 – 2,122 – 2,866 – 3,681 – 4,496 – 5,472 – 6,394 – 7,424 – 8,346
குஜராத் – 571 – 1,157 – 1,763 – 2,414 – 3,065 – 3,871 – 4,637 – 5,403 – 6,219 – 6,985
மகாராஷ்டிரா – 732 – 1,246 – 2,721 – 3,686 – 4,651 – 5,616 – 6,920 – 8,224 – 9,528 – 10,832
ராஜஸ்தான் – 935 – 1,585 – 2,235 – 3,060 – 3,795 – 4,530 – 5,435 – 6,200 – 6,965 – 7,730
– 575 – 1,220 – 1,777 – 4,190 – 4,885 – 6,060 – 7,494 – 8,208 – 9,962 – 10,676
* தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அரசு மானியத்திற்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய தொகை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது; அதன்படி, 100 யூனிட் பயன்படுத்தும் குடும்பத்திற்கு, மின் கட்டணம் முற்றிலும் இலவசம் என்பதால், 480 ரூபாய் மானியமாக வழங்கப்படும். 200 யூனிட் கொண்ட வீடுகளுக்கு முதல் 100 யூனிட் இலவசமும், அடுத்த 100 யூனிட்களுக்கு ரூ.245 மானியமும் வழங்கப்படுகிறது. அதேபோல், முதல், 500 யூனிட்கள் வரை மானியம் வழங்கப்படுகிறது. 500 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு, முதல் 100 யூனிட்கள் மட்டுமே இலவசம்; மீதமுள்ள யூனிட்கள் அதற்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
மற்ற மாநிலங்களும் குறைந்த ஆற்றல் நுகர்வு கொண்ட வீடுகளுக்கு, 1-30, 30-40 யூனிட்களுக்கு மானியம் வழங்கி, அதற்கேற்ப மானியம் வழங்குகிறது. அத்தகைய மானியத்திற்கு செலுத்த வேண்டிய கட்டண விவரங்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.