தேவையானவை
3 முட்டைகள், வேகவைத்தது
3 தேக்கரண்டி எண்ணெய்
1 கப் வெங்காயம்
1 தேக்கரண்டி உப்பு
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
2 பச்சை மிளகாய்
1 தேக்கரண்டி தக்காளி
1/4 தேக்கரண்டி சீரகப் பொடி
1/2+1/4 தேக்கரண்டி மிளகுத் பொடி
1/2 கப் தண்ணீர்
தேவைக்கேற்ப கொத்தமல்லி

செய்முறை: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், மிளகு சீரகப் பொடி சேர்த்து வதக்கவும், தண்ணீர் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்த பிறகு, 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள் சேர்த்து வேகவைத்த முட்டையை இரண்டாக வெட்டி சேர்க்கவும். மசாலா இரண்டு பக்கமும் கலக்கும் வகையில் வதக்கவும். சுவையான முட்டை மிளகு மசாலா தயார்.