மௌனகுரு படத்திற்குப் பிறகு சாந்தகுமார் 8 வருடங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் என்பதால் மகாமுனி மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், திரைக்கதை சரியில்லாத காரணத்தால் படம் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் படம் வெளியான பிறகு பல விருது விழாக்களில் விருதுகளை வென்றது.
இந்நிலையில் சாந்தகுமாரின் அடுத்த படமாக ரசவாதி வெளியானது. அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், ஜி.எம்.சுந்தர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்களுடன் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் சாந்தகுமார் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரமை நடிக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர் விக்ரமை சந்தித்து கதை சொன்னதாகவும், அதற்கு விக்ரம் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை முடித்த பிறகு சாந்தகுமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.