தமிழக வெற்றி கழகம் (தவெக) மக்கள் சேவையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இக்கழகம் சமூகத்துக்காக பணியாற்றி வருகிறது. தலைவர் விஜய் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாடாமல், ஒவ்வொரு நாளும் மக்கள் சேவையில் ஈடுபடுவது உண்மையான பிறந்த நாள் கொண்டாட்டம் என்று தலைவர் கூறுவதை பின்பற்றி இந்த இயக்கம் செயல்படுகிறது.
துறைமுக தொகுதியில் நடந்த நிகழ்வில் 14 பேருக்கு தலா ₹35,000 வழங்கி ஆட்டோக்கள் அளிக்கப்பட்டன. இதன்மூலம் அவர்களுக்குத் தொழில்வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவைகளை நேரடியாக அறிந்து திட்டங்களை உருவாக்குவதே தவெகக் கட்சியின் நோக்கமாகும்.பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்ததாவது, மாநிலம் முழுவதும் காலை உணவு திட்டம், சட்ட ஆலோசனை மையங்கள், தொழில் பயிற்சி மையங்கள், வீடு கட்டும் உதவித் திட்டங்கள் என பல சேவைகள் இக்கட்சியால் செய்யப்பட்டு வருகின்றன.

இவை அனைத்தும் தலைவர் விஜயின் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.மக்கள் சேவை என்பது தவெக இயக்கத்தின் அடிப்படை. சாதாரண உறுப்பினர்கள் கூட மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவது, கட்சி மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை காட்டுகிறது.
எங்கும் எங்கள் கட்சிக் கொடியைக் கண்டாலே மக்கள் அதை தவெக என அடையாளம் காண்கிறார்கள் என்பதும் பெருமைக்குரியது.மக்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் கட்சி என்ற பெருமையை தவெக இன்றும் தக்கவைத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை ஆனந்த் தெரிவித்தார். மக்கள் இந்த இயக்கத்தையே நேசிக்கிறார்கள், நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு நன்றி செலுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார்.