இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பதற்றமான சூழ்நிலையை காரணமாகக் கொண்டு, இன்று தங்க விலை செம்மையாக குறைந்துள்ளது. இதனால் நகை விரும்பிகளுக்கு இது நல்ல செய்தியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. மே மாத தொடக்கத்தில் ஒரே நாளில் இரண்டு முறை தங்க விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

மே 8 அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.55 உயர்ந்து ரூ.9,130 ஆகவும், ஒரு சவரன் ரூ.440 உயர்ந்து ரூ.73,040 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு, புதிய உச்சத்தை தொட்டது. ஆனால் இன்று மே 9 அன்று, தங்க விலை திடீரென குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.115 குறைந்து ரூ.9,015 ஆகவும், ஒரு சவரன் ரூ.920 குறைந்து ரூ.72,120 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.18 காரட் தங்கம் விலையும் குறைந்துள்ளது.
ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.7,435 ஆகவும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.59,480 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110, ஒரு கிலோ ரூ.1,10,000 என நிலைத்திருக்கிறது.இந்த திடீர் விலை குறைவால் நகை வாங்க திட்டமிட்டவர்கள் சந்தோஷமடைந்துள்ளனர்.
நகை கடைகளிலும் மக்கள் வருகை அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை மற்றும் சர்வதேச சூழ்நிலையை பொறுத்து தங்க விலை மேலும் மாற்றம் அடையக்கூடிய நிலைதான் உள்ளது. இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலை தெளிவாகும் வரை விலை மாற்றங்கள் தொடர வாய்ப்பு அதிகம்.