மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் நம் உடலை பாதிப்பதோடு, அடிமைத்தனத்தை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது. சிப்ஸ், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ், சோடா போன்ற உணவுகளில் நார்ச்சத்து குறைந்திருப்பதுடன், சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கிறது. இதனால் உடல் எடையையும், இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.இந்த வகை உணவுகள் சிறந்த சுவையுடன் மலிவாக கிடைக்கின்றன.
இதுவே மக்கள் இடையே விருப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் தொடர்ந்து இவைகளை உண்டால், பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக கிரெலின் மற்றும் லெப்டின் என்ற ஹார்மோன்கள் சமநிலையை இழக்கின்றன. இதனால் நீண்ட நேரமும் பசித்திருப்பது போன்ற உணர்வு வரும்.ஒரே சமயத்தில், இந்த உணவுகளுக்கு அடிமையாகும் ஒருவர் அதை தவிர்க்க முயன்றால், எரிச்சல், தலைவலி மற்றும் கவனம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

உணவுகளை பதுக்கி வைத்து மீண்டும் மீண்டும் சாப்பிடும் பழக்கம் உருவாகலாம். சிலர் ரகசியமாக ஜங்க் ஃபுட்களை ஒளித்து வைக்கும் நிலைக்கும் போகிறார்கள்.மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வில், 50-80 வயதினருள் 19% பேர் உணவைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறியுள்ளனர். இது போதைப் பழக்கத்தை ஒத்ததாக இருக்கிறது. ஒரு வாரத்தில் இரண்டு முறை என்றாலும் இந்த உணவுகளை தவிர்க்க முடியாமல் சாப்பிடும் நிலை உருவாகிறது.
உணவுக்கு மேலான கட்டுப்பாடு இழப்பது, அடிமைத்தனத்தின் முக்கிய அறிகுறி. சாப்பிடும் எண்ணம் இல்லாமல் கூட, அதற்கான ஈர்ப்பு குறைவதில்லை. சில குழந்தைகள் கூட, ரகசியமாக உணவை மெத்தைக்குள் பதுக்கி வைக்கிறார்கள்.இந்த நிலை நீடித்தால் உடல்நலம் மட்டுமல்லாமல் மனநிலைக்கும் பாதிப்பு ஏற்படலாம். ஆகவே, இவ்வாறான அறிகுறிகளை கண்டதும், உணவு பழக்கத்தை மாற்ற முயற்சி செய்யவேண்டும்.