சென்னை: உங்கள் முகம் பாலீஸ் போல மின்ன, வீட்டுல இருக்கும் பொருள்களே போதும்.
மஞ்சள்-கடலை மாவு:
உங்கள் முகத்தில் சேர்ந்துள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்ற இது உதவுகிறது. சுத்தமாக பராமரித்து தோல் பிரச்சினைகள் வருவதைத் தடுக்கிறது. உங்கள் சமையலறையில் இருக்கும் சில பொருட்கள், சரும பராமரிப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்கள் சருமத்திற்கு இயற்கையான மினுமினுப்பை வழங்கக் கூடிய பொருட்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மஞ்சளில் அதிக அளவில், ஆண்டிமைக்ரோபையல் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் பண்புகள் நிறைந்துள்ளது. அவை முகப்பரு குறைத்து உங்கள் முகத்தில் உள்ள தளும்புகளை போக்கும். மேலும், பாக்டீரியா தொற்று, வீக்கம் மற்றும் பிற தோல் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கிறது.
கடலை மாவு சிறந்த ஃபேஸ் பேக்காக செயல்படுகிறது. மாசு மரு இல்லாத சருமத்தைப் பெற, 2 தேக்கரண்டி கடலை மாவு, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு சில துளிகள் பால் கலந்து, இந்த பேஸ்டை உங்கள் முகத்திலும், கழுத்திலும் தடவவும். பின்னர், 20 நிமிடங்கள் கழித்து, அதை தண்ணீரினால் சுத்தம் செய்ய வேண்டும்.
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் முகம் அழகாகும். மேலும் இயற்கை பொருட்களாக இருப்பதால் உங்கள் அழகு இன்னும மிளிரும்.