தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகு அவர் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியை வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக உள்ளதால் அதன் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து லோகேஷ், கார்த்தியை வைத்து கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பின் கமலை வைத்து விக்ரம் 2, சூர்யாவை வைத்து ரோலக்ஸ் ஆகிய படங்களும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில் விஜய் நடிப்பில் மாஸ்டர் 2 உருவாகுமா என்ற கேள்விக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விஜயுடன் லோகேஷ் இணைந்து மாஸ்டர் படத்தை உருவாக்கி அதனை ஒரு வெற்றிக்குறியாக மாற்றியிருந்தார்.
தற்போது லியோ 2 படத்தை விட மாஸ்டர் 2 படத்தில்தான் அதிக ஆர்வம் உள்ளது என லோகேஷ் தெரிவித்துள்ளார். மாஸ்டர் படத்தில் இன்னும் சொல்லப்பட வேண்டிய கதைகள் உள்ளன என்றும், JD கதாபாத்திரமாக விஜய்யை மீண்டும் பார்க்கும் ஆசை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.மாஸ்டர் 2 பற்றிய ஒரு ஐடியாவும் மனதில் இருப்பதாகவும் லோகேஷ் தெரிவித்தார்.
ஆனால் தற்போதைக்கு விஜய் நடிப்பிலிருந்து விலக இருப்பதால் இது உடனடியாக நடக்கப்போவதில்லை. ஜனநாயகன் படம் விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் நிலையில், அவர் அரசியலில் முழு நேர ஈடுபாடு கொடுக்க திட்டமிட்டுள்ளார். எனவே, மாஸ்டர் 2 உருவாகும் வாய்ப்பு தற்போது இல்லை என்றாலும், எதிர்காலத்தில் விஜய் மீண்டும் நடிக்க தயாரானால், அந்த வாய்ப்பு இருக்கலாம் என்பதே நம்பிக்கை.இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.