
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அழகிய மணவாளன் என்ற கிராமத்தில், இன்று காலை 10 மணியளவில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. ஹெலிகாப்டர் திடீரென தரையிறங்கியதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சிலர் லேசான பதட்டம் அடைந்தனர்.
இந்த ஹெலிகாப்டரில் விமானப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த இடம் கொள்ளிடம் ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது. கொஞ்ச நாள் முன்பே சேலம் மற்றும் கோவை பகுதிகளில் இந்தபோன்ற பயிற்சிகள் நடந்திருந்தன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வீரர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.2022-ம் ஆண்டு அரியலூரில் ஹெலிகாப்டர் விபத்தொன்றின் போது ஏற்பட்ட தவறான தகவல்கள், மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியிருந்தன.

அந்த அனுபவம் காரணமாக, தற்போது நடந்த நிகழ்வும் முதலில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதிகாரிகள் இது ஒரு வழக்கமான பயிற்சி என்பதை உறுதி செய்துள்ளனர்.ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர், இந்திய விமானப்படை பல்வேறு இடங்களில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. அங்குள்ள மலைப்பாங்கான பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காரணமாக, ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டையை நடத்தியனர்.அதற்கான முன்னதாகவே, பல்வேறு பகுதிகளில் விமானப்படை வீரர்கள் பயிற்சிக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த பயிற்சிக்கான ஒத்திகை நடவடிக்கையாகவே, தற்போது அரியலூரில் ஹெலிகாப்டர் இறங்கியது.அழகிய மணவாளன் கிராமத்தில் ஏற்பட்ட பரபரப்புக்கு பின்னணி இதுதான். போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் தற்போது நிம்மதியாக இருக்கின்றனர். விமானிகள் அங்கு பயிற்சியில் ஈடுபடுவதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துவருகின்றனர்.இது பாதுகாப்புத் தேவை மற்றும் நாட்டுப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் ஒரு பொதுவான நடவடிக்கையாகும்.