குஜராத்தின் போடாட் மாவட்டத்தில் உள்ள துருபனியா கிராம பஞ்சாயத்தில் பணியாற்றும் 27 வயதான கிரிபால் படேல் என்பவர், சமீபத்தில் ‘ஆப்பரேஷன் சிந்துார்’ பற்றிய தனது விமர்சனத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த நடவடிக்கை நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கையை விமர்சித்ததற்காக அவரது பதிவுகள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தன.

பயங்கரவாதத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையான ‘ஆப்பரேஷன் சிந்துார்’ பற்றி சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதில், தேச ஒற்றுமையை பாதிக்கக்கூடிய வகையில் கருத்து தெரிவித்தவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.கிரிபால் படேலின் பதிவுகள் தேசத்தில் மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவருடைய சமூக வலைதள கணக்கிலிருந்து விமர்சனக் கருத்துக்களும் நீக்கப்பட்டன.இந்த வழக்கில் கிரிபால் படேலுடன் மேலும் 14 நபர்களும் சிக்கியுள்ளதாக போலீசார் கூறினர். அவர்களும் இதேபோல் சமூக வலைதளங்களில் ஆட்சேபனைகளான கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
இந்த நடவடிக்கைகள், சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.அரசு அதிகாரியாக இருந்தவர் இவ்வாறு விமர்சித்தது அரசுக்கு எதிராகக் காணப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் போலீசார் எச்சரிக்கின்றனர்.இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. விமர்சன உரிமையும் நாட்டின் ஒற்றுமையும் எந்த அளவுக்கு சமநிலையிலிருக்க வேண்டும் என்பதற்கான விவாதத்தையும் இது தூண்டியுள்ளது.இந்தியாவை பாதுகாக்கும் ராணுவத்தின் செயல்களை விமர்சிப்பதற்கான எல்லைகள் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசு, தேச விரோதக் கருத்துக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.