ஹம்சவிர்தன் மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் மகன். ‘புன்னகை தேசம்’, ‘ஜூனியர் சீனியர்’, ‘மந்திரன்’, ‘பிறகு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அவரது மனைவி சாந்தி 2021-ல் கொரோனாவால் இறந்தார். இதைத் தொடர்ந்து, கேரளாவைச் சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை அவர் காதலித்து வந்தார்.

இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் சமீபத்தில் புதுச்சேரியில் திருமணம் செய்து கொண்டனர். இந்து மற்றும் கிறிஸ்தவ சடங்குகளின்படி திருமணம் நடைபெற்றது. திருமண வரவேற்பு 18-ம் தேதி நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் நடைபெற்றது. இதற்கிடையில், ஹம்சவிர்தன் தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என்று மாற்றிக்கொண்டார்.