சென்னை: உத்தரகண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஆன்லைன் தங்குமிட முன்பதிவு போர்ட்டலை (www.uttarastays.com) அறிமுகப்படுத்தியுள்ளது.
தங்கும் விடுதி உரிமையாளர்களும் இந்த போர்ட்டலைப் பற்றிய தகவல்களை அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இதற்காக விடுதி உரிமையாளர் தங்குமிடக் கட்டணத்தையோ அல்லது அவர்களின் வருவாயையோ உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை. பொது மக்களுக்கு தங்கும் விடுதிகள் பற்றிய உண்மையான தகவல்களை வழங்கவும் ஆன்லைன் முன்பதிவு முறையை வழங்கவும் இந்த போர்டல் உருவாக்கப்பட்டது. சுமார் 5,000 ஹோட்டல்கள் தற்போது உத்தரகாண்ட் சுற்றுலாத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகள் மூலம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும் ஹோட்டல் உரிமையாளர்கள் ஆன்லைன் தளத்தை இலவசமாகப் பயன்படுத்தலாம். சிறிய ஹோட்டல் உரிமையாளர்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி இலவசமாக உள்ளது.
தீன்தயாள் உபாத்யாய் ஹோம்ஸ்டே திட்டத்தின் கீழ் உத்தரகாண்ட் சுற்றுலாத் துறை இப்பகுதியில் பல தங்கும் விடுதிகளை மேம்படுத்த மானியங்களை வழங்குகிறது. இது அவர்களின் வாடிக்கையாளர் சேவை திறன்களை மேம்படுத்த பல்வேறு பயிற்சிகளை உரிமையாளர்களுக்கு வழங்குகிறது.
இந்த போர்டல், உள்கட்டமைப்பு மேம்பாடு, உரிமையாளர்களுக்கு திறன் சார்ந்த பயிற்சி மற்றும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை வழங்கும் என்று சுற்றுலாத்துறையின் முதன்மை செயல் அதிகாரி, யுடிடிபியின் செயலாளர் ஸ்ரீ சச்சின் குர்வே கூறினார்.
மாநிலத்தில் உள்ள அனைத்து விடுதி உரிமையாளர்களையும் ஹோம்ஸ்டே நெட்வொர்க்கில் சேரவும், போர்ட்டலில் பதிவு செய்யவும் அவர் அழைப்பு விடுத்தார். யோகா, இயற்கை மருத்துவம், பஞ்ச கர்மா, ஆயுர்வேத மசாஜ் போன்ற நல மையங்களின் சேவைகளை சுற்றுலாப் பயணிகள் பெறும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள நலவாழ்வு மையங்களுடன் தங்கும் விடுதிகளை இணைப்பதே அரசின் எதிர்காலத் திட்டமாகும்.