பினாம் பென்: வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட 14 இந்தியர்களை போலீசார் மீட்டனர்.உ.பி மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மோசடியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர்கள் தற்போது தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளனர். அவர்களை மீட்டு விரைவில் சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில மாதங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி 5,000 இந்தியர்கள் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சென்றதும், குற்றவாளிகள் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை பறித்து, இந்திய மக்களை குறிவைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட வற்புறுத்தியுள்ளனர்.
இந்த மோசடியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ரூ.67 லட்சத்தை இழந்தார். போலீசார் 8 பேரை பிடித்து விசாரித்ததில், கம்போடியாவில் இருந்தவர்களுக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுபிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மத்திய அரசு 250 பேரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தது. மேலும் கம்போடியா செல்ல இளைஞர்கள் போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்ப வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது.