ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பால் டப்பா எழுதி பாடிய ‘மக்காமிஷி’ பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘பிரதர்’. இப்படத்தின் முதல் பாடல் ‘மக்காமிஷி’ தற்போது வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த பாடலின் வரிகளை பால் டப்பா எழுதி பாடியுள்ளார். ‘மக்காமிஷி’ என்றால் என்ன என்பதுதான் தற்போது சமூக வலைதளங்களில் எழுந்துள்ள கேள்வி. அந்த கேள்விக்கு விடை என்னவென்றால் கெத்து, மாஸ், ஸ்டைல் என்று அர்த்தமாம்.
‘’பிரதர்’ படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் ஐந்து பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு இது ஒரு முழுமையான ஆல்பமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷ் தெரிவித்தார். ஸ்கிரீன் சீன் மீடியா ‘பிகில்’, ‘ ‘நட்பே துணை’, ‘தடம்’ உட்பட 25 க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை விநியோகித்துள்ளது, மேலும் ‘தாராள பிரபு’, ‘சாணிக் காயிதம்’, ‘மத்தகம்’, போன்ற வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படைப்புகளைத் தயாரித்து தயாரித்துள்ளது.
படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக், டிவி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழ் மற்றும் OTT உரிமையை Zee5 டிஜிட்டல் வாங்கியுள்ளது. ஒரு இளைஞனுக்கும் அவனது சகோதரிக்கும் இடையேயான பிணைப்பைக் கூறும் உணர்ச்சிகரமான குடும்பப் படமாக ‘பிரதர்’ உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவியின் 30வது படம் இது.
‘பிரதர்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் நட்டி நட்ராஜ், பூமிகா, வி.டி.வி கணேஷ், சரண்யா பொன்வண்ணன், சீதா, தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ், சதீஷ் கிருஷ்ணன், எம்.எஸ்.பாஸ்கர், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தில் நடித்துள்ளனர். அண்ணன் படத்தின் வெளியீட்டுக்கான பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.