புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே கார்கில் போரின் 25வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ஜூலை 26ம் தேதி கார்கில் செல்கிறார். அங்கு நடைபெறும் நினைவு நாளில் பங்கேற்று, நினைவு ஸ்தூபியில் மரியாதை செலுத்துகிறார்.
1999-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியான கார்கில் மீது பாகிஸ்தான் ராணுவம் படையெடுத்தது. தொடர்ந்து நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. போரில் பல ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
கார்கில் கடும் பனிப்பொழிவில் நடந்த இந்த போரில் உயிர் தியாகம் செய்து பாகிஸ்தான் வீரர்களை விரட்டியடித்தனர் நமது இந்திய வீரர்கள்.
இதை நினைவு கூறும் வகையில் பிரதமர் மோடி கார்கில் செல்கிறார். ஒவ்வொரு ஆண்டும் கார்கிலில் தீபாவளியை கொண்டாடி வந்தார். கார்கில் போர் முடிந்து 25-வது வெள்ளி விழா நடைபெறுவதால் பிரதமர் மோடி அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.