சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி அண்பேக்ட் 2024 நிகழ்வின்பொழுது கேலக்ஸி ரிங் (Galaxy Ring) சாதனத்தை அறிமுகப்படுத்த உள்ளது. வருடத்தின் தொடக்கத்தில் இந்த கட்டிங் எட்ஜ் சாதனம் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) நிகழ்வில் ஒரு முன்னோட்டமாக காண்பிக்கப்பட்டது.
கேலக்ஸி ரிங் சாதனத்தில் என்னென்ன எதிர்பார்க்கலாம்
ஸ்மார்ட் வாட்ச்களில் இருக்கக்கூடிய வழக்கமான அதே அம்சங்களை ஒரு குறுகிய வடிவில் வழங்க கூடியதாக இந்த கேலக்ஸி ரிங் ஆரோக்கியத்தில் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது. ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வழங்கியுள்ள ஒரு அறிக்கையில் படி, கேலக்ஸி ரிங் சாதனத்தில் பின்வருவன அடங்கும்: இதயத்துடிப்பு கண்காணிப்பு: நாள் முழுவதும் உங்களுடைய இதயத்துடிப்பு மற்றும் செயல்பாட்டை கண்காணித்து கொண்டே இருக்கும். மன அழுத்தத்தை கண்காணித்தல்: தொடர்ச்சியான கண்காணிப்பு மூலமாக மன அழுத்தத்தை அளவிட்டு உங்களுடைய மனநலனில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
தோல் வெப்பநிலை அளவீடு: தொடுதல் மூலமாக வெப்பநிலை ஏற்ற இரக்கங்களை கண்காணித்து ஆரோக்கியத்தில் முக்கியமான பங்கு ஆற்றவுள்ளது. மாதவிடாயை முன்கூட்டியே கணித்தல்: வெப்பநிலை டேட்டாக்களை பயன்படுத்தி மாதவிடாய் சுழற்சியை முன்கூட்டியே கணித்து, அதனை கண்காணிக்க உதவும்.
குறட்டையை கண்டுபிடித்தல்: சார்ஜ் ஆகும் பொழுது அருகில் உள்ள ஒரு ஸ்மார்ட் போன் உதவியுடன் குறட்டையை கண்டுபிடிக்க உதவுகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் சாம்சங் அப்ளிகேஷனுடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக பயனர்களுக்கு அவர்களுடைய ஆரோக்கியம் குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
இது மாதிரியான ஆரோக்கியம் சார்ந்த அம்சங்கள் சாம்சங் நிறுவனத்தின் அணியக்கூடிய சாதனங்களில் புதிது அல்ல என்றாலும் கூட இந்த கேலக்ஸி ரிங் ஏற்கனவே இருக்கும் கேலக்ஸி வாட்ச் உடன் ஒரு கூடுதல் சாதனமாக அமைய உள்ளது. உடற்பகுதி மற்றும் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிக்க விரும்பும் நபர்கள் இந்த கேலக்ஸி ரிங் வாங்கி பயன்படுத்தலாம். கேலக்ஸி ரிங் டிசைன்
அட்டகாசமான செயல்பாடுகள் கொண்ட கேலக்ஸி ரிங்கில் ஃபேஷனுக்கும் எந்த ஒரு குறையும் இல்லாதவாறு சாம்சங் அதனை வடிவமைத்துள்ளது. இந்த ரிங் 9 வெவ்வேறு அளவுகள் மற்றும் 3 நிறங்களில் கிடைக்கும்: சில்வர், கோல்ட் மற்றும் கருப்பு. குறைந்த எடை கொண்ட இந்த கேலக்ஸி ரிங் குளாசி ஃபினிஷ் உடன் அணிந்திருப்போரை சௌகரியமாக உணர வைக்க கூடியது.
MWC நிகழ்வில் இதற்கு முன்பு வெளியிடப்பட்ட முன்னோட்டத்தில் கேலக்ஸி ரிங் சாதனத்தில் பேட்டரி ஸ்டேட்டஸ் டிஸ்ப்ளே காரணத்திற்காக ஒரு சார்ஜர் இன்டிகேட்டர் உள்ளதாக சொல்லப்பட்டது. ஸ்டைல் மற்றும் டெக்னாலஜி ஆகிய இரண்டையும் சமநிலைப்படுத்தும் விதமாக, அதே நேரத்தில் ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்கு இந்த வடிவமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி ரிங் $300-$350 (தோராயமாக ₹35,000) விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக சாம்சங் ஹெல்த் அப்ளிகேஷன் மூலமாக மேம்படுத்தப்பட்ட அம்சங்களை பெறுவதற்கு ஒருவர் ஒரு மாதத்திற்கு 10 டாலருக்கும் குறைவான சப்ஸ்கிரிப்ஷன் கட்டணத்தை செலுத்த வேண்டி இருக்கலாம்.