சென்னை: மக்களவை பட்ஜெட் எதிரொலியாக சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2080 குறைந்துள்ளது. பட்ஜெட்டில் சுங்கவரி குறைக்கப்பட்டதை அடுத்து தங்கம் விலை குறைந்தது. தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரி 15% லிருந்து 6% குறைந்ததை அடுத்து தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.
சென்னையில் ஆபரணத்தங்கம் இன்று காலை 1 கிராம் ரூ.6,810க்கு விற்பனை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒன்றிய பட்ஜெட்டில் சுங்கவரி குறைப்பு காரணமாக கிராமுக்கு ரூ.260 குறைந்துள்ளது. ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.2080 குறைந்து ரூ.52,400ஆக விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரி விகிதத்தை 15%லிருந்து 6%ஆக குறைத்தார்.
அதனடிப்படையில் ஆபரணதங்கத்தின் விலை குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலை தொடந்து அதிகரித்து வந்தது. சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,000ஐ கடந்து விற்பனையானது. இதற்கு பல்வேறு கரணங்கள் இருந்து வந்தாலும் அரசின் சுங்க வரியும் முக்கிய காரணமாக இருந்து வந்தது.
தங்கம், வெள்ளி போன்ற உலோகத்திற்கான சுங்க வரி 15% இருந்து வந்ததால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தற்போது சுங்க வரி குறைந்துள்ளதால் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2080 குறைந்து ரூ.52,400ஆக விற்பனை செய்யப்படுகிறது.