SBI கார்டு தனது கிரெடிட் கார்டு விதிகளில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஜூலை 15, 2025 முதல் நடைமுறைக்கு வருகிறது. முக்கியமாக, ஏர் ஆக்சிடென்ட் இன்சூரன்ஸ் பலன்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ELITE, Miles ELITE மற்றும் Miles PRIME போன்ற பிரீமியம் கார்டுகளுக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் ஜூலை 15 முதல் ரத்து செய்யப்படுகிறது. PRIME மற்றும் Miles PULSE கார்டுகளுக்கான 50 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் பலன்களும் இதே நாளில் நிறைவேற்றப்படும். மேலும், கோ-பிராண்டட் ELITE கார்டுகளுக்கு ஆகஸ்ட் 11 முதல் இன்சூரன்ஸ் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

UCO வங்கி, சென்ட்ரல் பேங்க், PSB, கரூர் வைசியா பேங்க், சவுத் இந்தியன் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டிருந்த ELITE மற்றும் PRIME கார்டுகளின் இன்சூரன்ஸ் பயன்களும் முடிவுக்கு வருகிறது. இதற்கப்புறம், மினிமம் அமவுண்ட் டியூ (MAD) கணக்கீட்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில், 100% GST, EMI தொகை, ஃபீஸ், ஃபைனான்ஸ் சார்ஜ் மற்றும் நிலுவை தொகை சேர்க்கப்படும்.
பணம் செலுத்தும் வரிசையிலும் மாற்றங்கள் உள்ளன. முதலில் GST, பின்னர் EMI, கட்டணங்கள், ஃபைனான்ஸ் சார்ஜ்கள், பேலன்ஸ் ட்ரான்ஸ்ஃபர், ரீடெயில் செலவுகள் மற்றும் இறுதியில் கேஷ் அட்வான்ஸ் என்று கட்டணம் செலுத்த வேண்டும். இந்த மாற்றங்கள் கார்டு ஹோல்டர்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டியவையாகும்.
பயனாளர்கள் தங்கள் செலவுகளை திட்டமிடுவதற்கும் இன்சூரன்ஸ் பாதுகாப்பு குறைவாகும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், எல்லா தகவல்களும் தரப்பட்டுள்ளவையாகும்.