சென்னை: நடிகர் விஜய் தனது பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி ரசிகர்களை நேரில் சந்திக்காதது குறித்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நீலாங்கரை வீட்டுக்கு அதிகாலை முதலே வந்திருந்த ரசிகர்களை அவர் சந்திக்கவில்லை. இதற்கு காரணம், அவர் முருகர் மாநாட்டில் ஆன்லைன் வாயிலாக பங்கேற்றிருப்பாரோ என திமுகவின் இளம் உறுப்பினர் வைஷ்ணவி கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் மீது அக்கறையில்லாத ஒருவராக அவர் ஆன்லைன் அரசியல்வாதியாக மாறிவிட்டார் என்கிறார்.

சேலத்திலிருந்து வந்த ஒரு ரசிகர், விஜய்யை பார்ப்பதற்காக 6 மணி நேரம் பயணித்தும், காண முடியாத வருத்தத்தை வெளிப்படுத்தினார். பலரும் குழந்தைகளுடன் வந்து காத்திருந்தபோதும், விஜய் வீட்டுக்குள்ளேயே இருந்தார். அவரை வருவார் என கூறப்பட்ட பல நேரங்களிலும், அவர் வெளிவராததால், ரசிகர்களின் கோபம் பீக் அடைந்தது. காரில் சென்றுவிட்டார் என கூறப்பட்ட போதும், அது உண்மை அல்ல என ரசிகர்கள் கூறினர்.
ரசிகர்கள் சிலர் “இவர் எங்களை பார்க்க விரும்பவில்லை, நாமும் அவரை விரும்பமாட்டோம்” என வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த கட்சிக்கும் வாக்கு அளிக்காத சிலர், தற்போது தவெகவிற்கும் ஓட்டு போட மாட்டோம் என தெரிவிக்கின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியதுடன், பலரும் விஜய்யின் மெளனத்தை கண்டித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் தவெக உறுப்பினராக இருந்த வைஷ்ணவி, சமூக பணிகளில் இருந்த அனுபவத்துடன் திமுகவில் இணைந்துள்ளார். தற்போது திமுக ஐடி விங் உறுப்பினராக செயல்படுகிறார். விஜயின் செயல்கள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் செய்யும் அவர், மக்களிடம் நேரில் இல்லாத அரசியல் செயல் மீது கேள்வி எழுப்புகிறார்.