திருமலை: திருமலையில் ஜூலை மாத சிறப்பு நாட்கள் குறித்த அறிவிப்பை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜூலை 5-ம் தேதி பெரியாழ்வார் சதுர்முறையும், 7-ம் தேதி ஸ்ரீ நாதமுனி திருநட்சத்திரமும், 10-ம் தேதி குரு பௌர்ணமி மற்றும் திருமலை கருட சேவையும், 16-ம் தேதி ஆனிவார ஆஸ்தானமும், 25-ம் தேதி சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரமும், 25-ம் தேதி புரசைவாரி தோட்டம், 28-ம் தேதி கருடபஞ்சாட்சமி, 2-ம் தேதி கருடபஞ்சாட்சரம் நிகழ்ச்சி மற்றும் 30-ம் தேதி கல்கி, காஷ்யப ஜெயந்தி நடைபெறுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.