சென்னை: தீய சக்திகளிடமிருந்து நம்மை காத்து, எதிரி ஏவிவிடும் தீய ஆற்றலை அழிக்கவே உருவெடுத்தவள் வாராகி அம்மன்.. இந்த வாராஹி அம்மனை இரவில் வழிபட என்ன காரணம் தெரியும்? பேய், பிசாசு, ஏவல், பில்லி போன்றவற்றிற்கு வலிமை கூடும் நேரம் இரவு நேரம் தான் என்பார்கள்.. இந்த நேரத்தில்தான் தீயவினைகளும் ஏவி விடப்படும்.
இந்த தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல் கொண்டவள் தான் வாராகி.. எப்போதுமே வாராகி வழிபாடு செய்து வருபவர்களுக்கு கெட்ட சக்தி என்றைக்குமே நெருங்காது என்பார்கள்.. எனவே, கெட்ட துர்சக்திகளிடமிருந்து நம்மை காக்க, இரவு நேர வழிபாடுகளை செய்ய வேண்டும் என்கிறார்கள். எருமை: அதுமட்டுமல்ல, கரிய நிறம், எருமை போன்றவை எல்லாமே சனி ஆதிக்கமாக உள்ளது.. ஆயுள் முடிக்கும் இறைவன் எமதர்மனும் எருமையையே வாகனமாக வைத்துள்ளார்.
இந்த எருமையையே வாகனமாக கொண்டு அவதரித்தவள்தான் வாராகி.. எனவே, வாராகியை வணங்கும் யாரையும் சனி பகவான் நிச்சயம் தீண்டமாட்டார் என்பது நம்பிக்கையாகும். அதனால்தான் தஞ்சை பெரிய கோவிலில், இன்றுவரை முதல் பூஜை, வாராஹிக்கே நடத்தப்பட்டு வருகிறது.. அதிலும். நவராத்திரியின்போது 9 நாட்களும், இரவு நேரத்தில் விரதமிருந்து வாராகி அம்மனை பூஜை செய்து செய்துவந்தால், அனைத்து நன்மைகளும் கிட்டும்.
ராசிக்காரர்கள்: நவராத்திரி நாட்களில் மட்டுமல்ல, 27 நட்சத்திரங்களில் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்களும், மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும், சனி ஆதிக்கம் உள்ளவர்களும், சனி திசை நடப்பவர்களும் வாராஹியை வழிபட்டு வரவேண்டும். அதேபோல, ஏழரை சனி, கண்டச்சனி என சனியின் எந்த திசையால் தொல்லை அனுபவிப்பவர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வாராஹியை தீபமேற்றி வழிபடலாம்.. இதைத்தவிர, பஞ்சமி, பெளர்ணமி, அமாவாசை திதிகளிலும் வழிபடலாம்.. அதிலும், பஞ்சமி திதியன்று வாராஹி துதிகளை பாடி, மனமுருக அழைத்து வேண்டினால் வாராஹி அம்மன் வீடு தேடி வந்து ஆசீர்வதிப்பாள் என்று நம்பப்படுகிறது.
கடன் தொல்லை: மகா வாராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன.. அந்தவகையில், புதன் கிழமைகளில் அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். ஒவ்வொரு புதன் கிழமையும், வாராஹி அம்மன் ஆலயத்தில் அல்லது சன்னதியில் ஒற்றைப் படை எண்ணில், அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வந்தால், சில வாரங்களிலேயே மிகப்பெரிய மாற்றங்கள் தெரியுமாம்.. அதேபோல, ஜாதக ரீதியாக ஆறாம் வீடு பலம் இல்லாதவர்களும், புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
நைவேத்தியம்: வீட்டில் வாராகியின் படத்தையோ, விக்கிரகத்தையோ வைத்து வழிபட வேண்டுமானால், வடக்கு நோக்கி, வாராகியின் முகம் இருக்கும்படி அமைத்து வழிபட வேண்டும். காரணம், வட திசையே வாராகிக்கு உரிய திசையாக கருதப்படுகிறது.. வழிபாட்டின்போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தியும், நைவேத்தியமாக தயிர் சாதம், மாதுளை படைத்தும், சிவப்பு நிறம் கொண்ட மலர்களை சாத்தியும், தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம். சிறந்த நேரம்: ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம்.
பவுர்ணமி நாளில் அன்னையின் வலிமை கூடும்.. எனவே, பஞ்சமி, அஷ்டமி, தசமி நாட்களில் அன்னையை வழிபடலாம். மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணிவரை அதாவது, பிரம்மா முகூர்த்தம் அல்லது சூரிய அஸ்தமனம் ஆன பின்பு வழிபடுவது உகந்தது என்றாலும், இரவு 8 மணிக்கு மேல் 10 மணிக்குள் வீட்டிலேயே வாராஹியை நினைத்து வழிபட்டு வந்தால், எதிரிகளே இல்லை என்ற நிலைமை ஏற்படும். நன்மைகள்: அத்துடன் கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.. சொத்து பிரச்சனை, கடன் தொல்லை தீரும்.. நெடுநாள் நோய்களும் குணமாக தொடங்கும். அதைவிட முக்கியமாக, தைரியம், தன்னம்பிக்கை, பயமின்மை போன்ற குணங்கள் உண்டாகும்.. எந்தவிதமான நோய்த்தொற்றுகளும் அண்டாமல் இருக்க இரவு நேரத்தில் வாராகி தேவியை வழிபடலாம்.