மதகஜராஜா படத்தில் விஷாலும், சுந்தர் சியும் முதல் முறையாக இணைந்தனர். இப்படம் 8 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டாலும், தயாரிப்பாளர் ஜெமினி பிலிம் சர்க்யூட்டின் கடன் காரணமாக இன்னும் வெளியாகவில்லை. விஷால் கஷ்டப்பட்டு ஒரு கட்டத்தில் வெறுப்படைந்து படத்தை விட்டு வெளியேறினார்.
தற்போது இந்த படத்தை 11 வருடங்களுக்கு பிறகு வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது இவர்களின் கடன் பிரச்சனைகள் சிலவற்றை தீர்த்துவிட்டதாகவும், அதனால் ‘மத கஜ ராஜா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு செப்டம்பரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி சந்தானம் படத்தில் குறிப்பிட்ட காலம் பிணமாக நடித்துள்ளார். இதற்கு முன் நாகேஷ் மகளிர் மட்டும் படத்தில் இறந்தவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.