சென்னை: சுவையான மாம்பழ லட்டு எளிதாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
மாம்பழ கூழ் – 1/2 கப்
சுண்டக் காய்ச்சிய பால் – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1 கப்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
நட்ஸ் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை: இந்த ரெசிபியை செய்ய அடி கனமாக உள்ள பாத்திரத்தை உபயோகப்படுவது சிறந்தது. அடுப்பில் அந்தப் பாத்திரத்தை வைத்து அதில் தேங்காய் துருவல் போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். அத்துடன் மாம்பழக் கூழை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
இந்தக் கலவையுடன் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அனைத்தும் ஒன்று சேரும்படி கலக்க வேண்டும். நல்ல பதத்தில் அதாவது சிறிது கெட்டியாக லட்டு பிடிக்க ஏதுவான நிலைக்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
இறக்கி வைத்த இந்தக் கலவை ஆறிய பின் சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் சிறிது தேங்காய் துருவல் தூவிக் கொள்ளுங்கள். அதன் மீது செய்து வைத்த உருண்டைகளை உருட்டி எடுத்தால் சுவையான மாம்பழ லட்டு ரெடி!