சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓலா, உபர் போன்ற கார் வாடகை சேவைகளின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பொது மக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல், தன்னிச்சையாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்த அனுமதிப்பது மக்களின் நலனுக்கு எதிரானது.

மேலும், ‘பீக் ஹவர்ஸ்’ நேரத்தில் கட்டண உயர்வை இரட்டிப்பாக்க அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த கட்டண உயர்வு ஏழைகளையும், பொதுமக்களையும் பெரிதும் பாதிக்கும்.
மத்திய, மாநில அரசுகள் இதை கவனத்தில் கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கட்டண உயர்வுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.