வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு பெருகி வருகிறது. அவரது பிரச்சாரத்திற்கு ஒரே நாளில் ரூ.677 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. ஆதரவு பெருகி வருவதால் அவர் விரைவில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெறவுள்ளது.குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜோ ‘பைடன் மீண்டும் போட்டியிட இருந்தார். 81 வயதில், பைடென் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொள்கிறார். டிரம்புடன் நேரடி விவாதத்தில் பேசுவதற்கு பைடென் மிகவும் மந்தமாக இருந்தார். இதேபோல், செய்தியாளர் சந்திப்பின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை புடின் என்றும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை டிரம்ப் என்றும் தவறாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் ஜனநாயக கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அவர் அவ்வப்போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாகவும், இதனால் அவர் போட்டியிட வேண்டாம் என்றும் ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பராக் ஒபாமா கூட ஜோ பைடனை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்தார். இதையடுத்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ ‘பைடன் அறிவித்தார். தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் போட்டியிட பைடன் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
ஆனால் இதுவரை ஜனநாயக கட்சி கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லை. கமலா ஹாரிஸ் கட்சியின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளதால் அவர் ஜனாதிபதியாக வெற்றி பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவரது பிரச்சாரத்திற்கு நன்கொடைகள் குவிந்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 81 மில்லியன் டாலர் (ரூ. 677 கோடி) நன்கொடையாகப் பெற்றுள்ளார். இது கமலா ஹாரிஸுக்கு பெருகி வரும் ஆதரவை காட்டுகிறது.
இதையடுத்து கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. முன்பு ”பைடன் ஹாரிஸ்’ பிரச்சாரம் என்று அழைக்கப்பட்ட பெயர், தற்போது ‘ஹாரிஸ் பார் பிரசிடெண்ட்’ என மாற்றப்பட்டுள்ளது.