தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் வெளியான அந்தகன் ஹிந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் ஆகும். இந்தப் படம் உருவாகி சில வருடங்கள் ஆன பிறகும் வெளியாகாமல் முடங்கிக் கிடந்தது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக மார்க்கெட்டில் இல்லாத பிரசாந்த், இந்தப் படம் தனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார். இப்படத்தில் பிரசாந்துடன் ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய தியாகராஜன் தன்னைப் பற்றிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். அதில், “இந்தப் படத்தின் டப்பிங்கிற்கு வந்த ஊர்வசி என்னிடம் ஒரு கவரைக் கொடுத்தார். அதில் நிறைய பணம் இருந்தது. இந்தப் படத்துக்காக எனக்கு நிறைய சம்பளம் கொடுத்திருக்கீங்க. இதை திரும்பப் பெறுங்கள் என்றார். இந்தக் காலத்தில் இப்படி ஒரு நடிகை இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டேன்.