சென்னை: முன்னணி நடிகர் அஜித் குமார், சினிமாவில் நடிக்கும் அதே வேளையில், தனது அணியின் சார்பாக பல நாடுகளில் தொழில்முறை கார் பந்தயங்களில் பங்கேற்கிறார். சமீபத்தில் அவர் ஒரு Mercedes-AMG GT3 காரை வாங்கினார். அந்த காரின் விலை சுமார் ரூ.10 கோடி ரூபாய்.
அதனுடன் அவர் எடுத்த புகைப்படம் வைரலானது. இந்த சூழ்நிலையில், அஜித் குமாரை சந்தித்த சில செய்தியாளர்கள் அவரிடம் ஹாலிவுட் கார் பந்தய படங்கள் குறித்து கேட்டனர். சமீபத்தில் வெளியான பிராட் பிட்டின் ‘F1’ படத்திற்கு கிடைத்த நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து, கார் பந்தயம் தொடர்பான படத்தில் நடிப்பது குறித்து பரிசீலிப்பீர்களா என்று கேட்டனர்.

இதற்கு புன்னகையுடன் பதிலளித்த அஜித் குமார், ‘ஹாலிவுட் படங்களில் நடிப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் அடுத்த பாகத்திலோ அல்லது ‘F1’ படத்தின் அடுத்த பாகத்திலோ நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக நடிப்பேன்.
“என் படங்களில் சண்டைக் காட்சிகளை நானே செய்கிறேன். கார் பந்தயக் காட்சிகளையும் நானே செய்கிறேன்” என்று அவர் கூறினார். அவரது நேர்காணல் வைரலாகி வருகிறது.