சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் நாகார்ஜுனா நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற குபேரா கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?
தனுஷ், நாகார்ஜூனா, ரஷ்மிகா கூட்டணியில் உருவான ‘குபேரா’ படம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 20-ம் தேதி வெளியான இப்படம் முதல் வாரத்தில் ₹100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
அதன்பின், வேறு படங்கள் ரிலீஸான நிலையில், குபேராவின் வசூல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், இதுவரையான 18 நாள்களில் குபேராவின் உலகளாவிய வசூல் ரூ.134.25 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷ் நடிப்பு இந்த படத்தில் வெகுவாக பாராட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிச்சைக்காரன் கேரக்டரில் அவர் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார் இதனை நடிகர் சிரஞ்சீவியே பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.