‘குபேரா’ ஜூலை 18 அன்று பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சேகர் கம்முலா இயக்கிய ‘குபேரா’ தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள படம். அனைத்து மொழிகளிலும் வெளியான இந்தப் படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
தமிழில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தை ஏசியன் சினிமாஸ் தயாரித்தது. தற்போது இந்தப் படம் ஜூலை 18 அன்று பிரைம் வீடியோவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் தனுஷின் நடிப்பைப் பாராட்டிய பலர், அவருக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, திரையரங்கில் பார்க்காத பலர் ஓடிடி வெளியீட்டிற்காகக் காத்திருந்தனர். ‘குபேரா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் இப்போது பட பூஜையுடன் விக்னேஷ் ராஜாவின் படத்தைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்தப் படத்தை வேல்ஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.