சென்னை : வயது மூப்பு காரணமாக இன்று நடிகை சரோஜாதேவி காலமானார். தனது கணவர் இளம் வயதிலேயே மரணமடைந்த நிலையில் மறுமணம் செய்யாமல் வாழ்ந்து வந்த சரோஜாதேவி என்பது தெரியுங்களா?
சரோஜா தேவி திரையுலகின் உச்சத்தில் இருந்தபோதே, ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் திடீரென இளவயதில் மரணிக்க, அதன்பிறகு சரோஜா தேவி மறுமணம் எதுவும் செய்யாமலே கடைசி வரை வாழ்ந்தார்.
இதை பேட்டி ஒன்றில் நினைவு கூர்ந்துள்ள சரோஜா தேவி, தமது கணவர் ரொம்ப அன்பானவர். அவரோட கேரிங் ரொம்ப பிடிக்கும். ரொம்ப ஒழுக்கமானவர், அதனாலேயே மறுமணம் செய்யவில்லை என்று கண் கலங்கியுள்ளார்.
வயது மூப்பு காரணமாக சரோஜாதேவி காலமானார். அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.