தேவையான பொருட்கள்:
தக்காளி – தலா 2
பச்சை மிளகாய் – 1,
பூண்டு – 2 பல்,
பொடியாக நறுக்கிய தேங்காய் – சிறிதளவு,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, தேங்காய்ப் போட்டு வறுத்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தீயைக் குறைத்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, நறுக்கிய தக்காளிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
பச்சை வாசனை போனதும், சீரகத்தூள், பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் பிரிந்து வந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள தக்காளி குழம்பு ரெடி.