இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடி வரும் ப்ரியங்கா சோப்ரா, உலக அழகிப் பட்டம், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை பறந்த வெற்றிக் குருவி. ஆனால் இந்தக் கெளரவத்தின் பின்னால் தன் தம்பி சித்தார்த் சோப்ரா போட்ட ஒரு “சின்ன சதி” இருந்தது என்கிறார் ப்ரியங்கா தான்!
17வது வயதில் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய ப்ரியங்கா, தந்தை-தாயுடன் இருந்த வீட்டில் தங்கினார். வீட்டில் இருந்த இரு படுக்கையறைகளில் ஒன்று தம்பி சித்தார்த் உடையதாக இருந்ததால், அதைப் பெற்றுக்கொண்டு ப்ரியங்காவுக்கு வழங்கினர். சித்தார்த் அதில் இருந்து வெளியேற வேண்டி ஹாலில் தங்க நேர்ந்தது.

இது சித்தார்த் மனதில் எரிச்சலை ஏற்படுத்தியது. அக்காவை வீட்டில் இருந்து “அழகாக” அனுப்ப ஒரு யோசனை செய்தார். பத்திரிகையில் வந்த மிஸ் இந்தியா போட்டி விளம்பரத்தை பார்த்ததும், ப்ரியங்கா அழகும் உயரமும் உள்ளவர், நிச்சயம் வெல்வார் என்று நினைத்து அம்மா மதுவிடம் கூறினார். மகளின் புகைப்படத்தை போட்டிக்கு அனுப்ப ஊக்குவித்தார். அதுவரை ப்ரியங்காவுக்கு இந்த திட்டம் தெரியாது.
திடீரென வந்த அழைப்பை ஏற்று ப்ரியங்கா மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டார். அதில் வெற்றி பெற்று, உலக அழகியாகும் வரையில் அந்த ஒரு படுக்கையறை அவரை அழைத்துச் சென்றது.
இந்த சம்பவத்தை ப்ரியங்கா எப்போதும் நகைச்சுவையாக நினைவு கூறி, “உலக அழகியாக ஆனதற்கு காரணம் என் தம்பியின் ஏக்கம் தான்!” என்று உருக்கமாக சொல்லுவார்.
இன்று ப்ரியங்கா இந்தியாவின் டாப் பேய்ட் நடிகையாக இருப்பதோடு, ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். மகேஷ் பாபு நடிக்கும் SSMB29 என்ற ராஜமௌலி படத்திற்காக ₹30 கோடி சம்பளமாக பேச்சு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.