சென்னை: சில பெண்களுக்கு முழங்கை கருப்பாக இருக்கும். குளிக்கும்போது எவ்வளவு சுத்தம் செய்தாலும் அந்த கருப்பு அகலாது. சிலர், சந்தையில் விற்கப்படும் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தி பார்ப்பார்கள். ஆனால் இந்த சந்தை தயாரிப்புகளில் சருமத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இருக்கலாம். எனவே, முழங்கை ‘கருப்பை எப்படி வீட்டு தயாரிப்பு மூலம் சரி செய்யலாம் என தெரிந்துகொள்வோம்.
முதலில் ஒரு பாத்திரத்தில், தேவையான அளவு கடலை மாவு எடுத்துக்கொள்ளவும். எலுமிச்சம்பழத்தை வெட்டி சாறு எடுத்து, அதனுடன் கலக்கவும். இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்த பிறகு, வெட்டிய எலுமிச்சையை அதில் தோய்த்து முழங்கையில் தேய்க்கவும். பின்னர் சுமார் 20 நிமிடங்கள் அதை உலரவிடுங்கள்.
அதையடுத்து, தண்ணீரில் பருத்தி துணியை நனைத்து முழங்கையை சுத்தம் செய்யவும். இவ்வாறு வாரத்துக்கு 2 முதல் 3 முறை செய்யலாம்.
கடலை மாவின் தன்மையானது. சருமம் மென்மையாவதற்கும். கருத்துப் போகாமல் இருப்பதற்கும் உதவுகிறது. எந்த வகையான தோல் நோய்த்தொற்றையும் தடுக்க கடலைமாவு உதவியாக இருக்கிறது. முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும், கடலைமாவை பயன்படுத்தலாம்.
எலுமிச்சையானது பிளீச்சிங் விளைவைக் கொண்டுள்ளது. இது சருமத்தின் கருமையை நீக்க உதவுகிறது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம், சருமம் கருமையாவதை தடுத்து, தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. பொதுவாக, சுத்தமான சருமத்தைப் பெற தினமும் சரியான கவனிப்பு மிகவும் முக்கியம்.
ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி கடலை மாவு தண்ணீர் விட்டு கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி வர சருமம் மென்மையாகும். குளிக்கும்போது கடலை மாவு தேய்த்துக் குளித்தால் முகம் வழுவழுப்பாகும், சுருக்கம் ஏற்படாது. இளமையாக தோன்றலாம்.