கன்னியாகுமரி: ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டம் தோவாளை பூ சந்தையில் சுமார் 40 டன் பூக்கள் குவிந்துள்ளதால், அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று கிலோ ரூ.300-க்கு விற்கப்பட்ட பிச்சி பூவின் மொத்த விலை மூன்று மடங்கு அதிகரித்து ரூ.900 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, பிச்சி பூவின் சில்லறை விலை ரூ.1,100 ஆக அதிகரித்துள்ளது.
மல்லிகைப்பூவின் மொத்த விலையும் இரு மடங்கு அதிகரித்து கிலோ ரூ.600-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.800-க்கும் விற்கப்படுகிறது. ரூ.30-க்கு விற்கப்பட்ட கேந்தி பூவின் விலை ரூ.80 ஆகவும், அரளி ரூ.80-ல் இருந்து ரூ.180 ஆகவும், ரோஜா ரூ.80-ல் இருந்து ரூ.150 ஆகவும் உயர்ந்துள்ளது.

ஒரு கிலோ செவ்வந்தி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.220-க்கும் விற்கப்படுகிறது. ரூ.3-க்கு விற்கப்பட்ட தாமரை பூ இன்று ரூ.10 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரு தாழம் பூவின் விலை ரூ.75-க்கு விற்கப்படுகிறது.
விலை உயர்ந்த போதிலும், சில்லறை மலர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கேரளா மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பூக்களை வாங்கி வருகின்றனர். அதிக லாபம் கிடைத்ததால் மலர் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.