சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை தொடர்ந்த பணமோசடி சட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜரானனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.கார்த்திகேயன், வழக்கு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு நீதிமன்ற விசாரணை வழக்குகளில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை பணமோசடி சட்ட வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.