பாலிவுட் நடிகை சாரா அலி கான், 96 கிலோ எடையுடன் ஆரம்பித்த வாழ்க்கையை, 51 கிலோ எடையுடன் புதிய உருவமாக மாற்றியுள்ளார். ஹார்மோன் கோளாறான பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்ற பிரச்சனையுடன் போராடிய அவர், தனது கனவான திரையுலகைப் பார்வை இழக்காமல், கடுமையான உழைப்பால் வெற்றி பெற்றுள்ளார்.

பாலிவுட் நுழைவு என்பது சாராவுக்கு எளிதாக இல்லை. சைஃப் அலி கான் மற்றும் அம்ரிதா சிங்கின் மகளாக இருந்தாலும், அவர் தன்னை ‘பாடி ஷேமிங்’ சிக்கல்களில் இருந்து மீட்டு, “உடல் எடையை பாதியாக குறைக்க வேண்டும்” என்ற தயாரிப்பாளரின் (கரண் ஜோஹர்) தேவைக்கேற்ப வாழ்கையை மாற்றினார். PCOS காரணமாக எடை அதிகரிப்பு, முகத்தில் முடி வளர்ச்சி, மாதவிடாய் கோளாறுகள் போன்ற சவால்களை சந்தித்தாலும், உணவிலும், உடற்பயிற்சியிலும் முழுமையான மாற்றங்கள் கொண்டு வந்தார்.
சாரா பின்பற்றிய உணவுமுறை “சர்க்கரை இல்லை, பால் இல்லை, கார்போஹைட்ரேட் இல்லை” என்ற மிகக் கடுமையான கட்டுப்பாடுடன் இருந்தது. உடற்பயிற்சியில் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், பைலேட்ஸ், யோகா, மற்றும் நடன பயிற்சிகளை தொடர்ந்து செய்ததோடு, மன உறுதியையும் வளர்த்தார். ஒரு முழுமையான மாற்றத்தை சாத்தியமாக்கிய அவரது முயற்சி, உடல்நலம் மற்றும் ஒழுக்கமான வாழ்க்கைமுறையின் விளக்கமாக அமைந்தது.
இந்த மாற்றப்பயணம், பிஸிஓஎஸ் பிரச்சனையுடன் வாழும் பெண்களுக்கு மட்டும் அல்லாது, தங்கள் கனவுகளுக்காக உழைக்கும் அனைவருக்கும் பெரும் உந்துதலாகிறது. சாரா அலி கான் தனது வாழ்க்கையை மாற்றியதோடு, மற்றவர்களுக்கும் மாற்றத்திற்கான வழிகாட்டியாகி இருக்கிறார்.