பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று, பின்னர் சில தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ஷிவானி நாராயணன், திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார். வெளிநாட்டுக்குச் சென்று உயர்கல்வி பெற திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு பேட்டியில் கூறினார். இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில் அவரின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன.

ஆனால் தற்போது ஷிவானி மீண்டும் தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாகியுள்ளார். நவீன ஃபேஷன் உடைகள், குறிப்பாக கிழிந்த ஜீன்ஸ் ஷார்ட்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றங்களுடன் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 3.9 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள ஷிவானி, விரைவில் 4 மில்லியன் எண்ணிக்கையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சினிமாவில் ஒரு இளம் நடிகையாக ஷிவானி விரைந்து முன்னேறியவர். தற்போது டவுசர் ஃபேஷனில் அவர் காட்டும் டேரிங் பாவனைகள், இணையத்தில் பெரும் வைரலாகி வருகின்றன. சம்மர் ஸ்டைலில் அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து சிலர் பாராட்ட, சிலர் கலாய்ப்பதில் ஈடுபட்டுள்ளனர். “அரை டவுசரை அக்கு அக்கா கிழித்து போட்டுட்டு வந்திருக்கியேம்மா?” என ரசிகர்கள் புகழும் விமர்சனமும் கலந்து கருத்து தெரிவித்துள்ளனர்.
பிக் பாஸ் சீசன் 9 குறித்து தகவல்கள் கசிந்துள்ள நிலையில், கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என்றும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சீசனில் தொகுப்பாளராக வருவார் எனவும் கூறப்படுகிறது. ஷிவானி பிக் பாஸ் மூலம் பெரும் ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திய நிலையில், அவர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் ஆட்டம் காட்டும் நிகழ்வுகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.