உலகநாயகன் கமல் ஹாசன் தற்போது தனது சினிமா வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுத்துள்ளார். இனிமேல் அவர் வெளி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்கவே முடியாது என முடிவெடுத்துள்ளார். இதற்கான முக்கிய காரணமாக, மணிரத்னத்துடன் இணைந்து தயாரித்த ‘தக் லைஃப்’ பட அனுபவமும், சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ பட வெற்றியும் கூறப்படுகிறது.

கமல் ஹாசன் தற்போது ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள நிலையில், நேரத்தை செமயாக திட்டமிட்டு பயன்படுத்த நினைக்கிறார். அந்த காரணத்தால், இனிமேல் தனது சொந்த நிறுவனமான ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடிக்க முடிவெடுத்துள்ளார்.
பிரபாஸ் நடித்த ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் கமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதுவே அவரின் வெளிநிறுவனங்களுக்கு நடிக்கும் கடைசி படம் என கூறப்படுகிறது. முதல் பாகத்தில் மிகக் குறைந்த நேரம் வந்தாலும், கமல் ஹாசனின் தோற்றம் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கே ரூ.150 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை, கமல் தயாரித்த அமரன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தயாரிப்பு, விநியோகம், விளம்பர பணி அனைத்தையும் தனக்கே உரிய வகையில் செலுத்தியதால்தான் அந்த படம் வெற்றி பெற்றதாகவும் அவர் நம்புகிறார். அதனால்தான் இனி வெளிப்படங்களுக்குப் பதிலாக, தானே தயாரிப்பாளராக நடிப்பதும் இயக்குவதும் தான் என்பதற்காக அவர் உறுதியாக முடிவு செய்துள்ளார்.
‘இந்தியன் 3’ திரைப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. அன்பறிவ் இயக்கும் KH 237 என்ற படம் தயாரிப்பும் நடிப்பும் இரண்டும் கமல் ஹாசனிடம் உள்ளது. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகி, நாடாளுமன்ற, தயாரிப்பு மற்றும் நடிப்பு வேலைகளில் முழு நேரத்தையும் செலவிட திட்டமிட்டுள்ளார்.