சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 2025 ஜூலை மாதத்தில் புதிய மைல்கல்லை எட்டி, ஒரே மாதத்தில் 1,03,78,835 பயணிகளை பதிவு செய்துள்ளது. இதுவரை மெட்ரோ சேவையில் ஒரே மாதத்தில் அடைந்த மிக உயர்ந்த பயணிகள் எண்ணிக்கையாக இது பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, 11.5 லட்சம் பயணிகள் அதிகரித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை 10 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், நகர்ப்புற போக்குவரத்தில் பாதுகாப்பான, நம்பகமான சேவையை வழங்கி வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் (விமான நிலையம் – விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை – சென்ட்ரல்) சேவைகள் நடக்கின்றன. இரண்டாம் கட்ட வளர்ச்சி திட்டத்தில் மாதவரம், சிப்காட், சோழிங்கநல்லூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
2025 ஜூலை மாதத்தில் பயணச்சீட்டு வகைகளின் அடிப்படையில் பயணிகள் விவரம்:
- Travel Card மூலம்: 6,55,991
- QR Code பயணச்சீட்டு முறைகள்: 45,66,058 (CMRL App, Whatsapp, Paytm, PhonePe, ONDC உள்ளிட்டவை)
- சிங்கார சென்னை அட்டை (NCMC): 51,56,786
அதிகபட்ச பயணிகள் பதிவு 2025 ஜூலை 4ஆம் தேதி – 3,74,948 பயணிகள்.
மேலும் பயணிகள் அனுகும் வசதிக்காக மெட்ரோ நிறுவனம் Digital SVP, Whatsapp Booking (+91 83000 86000), Paytm, PhonePe போன்றவற்றில் 20% கட்டண தள்ளுபடியும் வழங்கி வருகிறது.
சென்னை மெட்ரோவின் வளர்ச்சி மற்றும் சாதனைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்புக்கு நிறுவனம் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளது.