புதுடெல்லி: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று டெல்லியில் கூறுகையில், “இந்தியா-ரஷ்யா உறவுகள் வலுவானவை.
இந்த உறவு மூன்றாவது நாட்டின் தலையீட்டால் பாதிக்கப்படாது. அதேபோல், இந்தியா-அமெரிக்க உறவுகளும் வலுவடைந்து வருகின்றன. நாட்டின் நலனுக்காக தேவையான பாதுகாப்புக் கொள்கையை நாங்கள் பின்பற்றுகிறோம்,” என்று அவர் கூறினார்.

அமெரிக்கர்களின் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும் இதற்கிடையில், புதிய அமெரிக்க வரி நடவடிக்கைகளால் ஏற்படும் பணவீக்கம் காரணமாக, அமெரிக்காவில் சராசரி வீட்டுச் செலவுகள் ஆண்டுக்கு $2,400 அதிகரிக்கும்.
அமெரிக்க பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக எஸ்பிஐ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் மின்னணு பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.