தேனி: தேனியில் மாவட்ட பாஜ அலுவலகத்தில் புதைக்கப்பட்ட நாயின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் மாவட்ட பாஜ அலுவலகம் உள்ளது. அலுவலகத்தை சுற்றி சுற்றுச்சுவர் உள்ளன. நேற்று மாலை கட்டடத்தின் பின்னால் வலதுபுறம் மூலையில் நாய்கள் மண்ணை கிளற, துர்நாற்றம் வீசியது
அதன் பின்னர் எதுவோ புதைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதையடுத்து மாவட்டத் தலைவர் ராஜபாண்டியன் அளித்த தகவலின் பேரில் தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர் தலைமையில் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர்.
அப்போது அங்கு இறந்த நாய் துணியில் சுற்றி உப்பு, செவ்வந்திப் பூக்களுடன் புதைக்கப்பட்டிருந்தது. புதைத்து 3 நாட்கள் ஆகிய நிலையில் சடலத்தை தோண்டி எடுத்தனர். தேனி போலீசார் விடியோ பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.