தேவையான பொருட்கள்:
வெங்காயம்- 3
கடலைஎண்ணெய்- 8 ஸ்பூன்
பட்டை- 2 துண்டு
ஏலக்காய்- 10
அன்னபூர்ணா இலை- 6
கறிவேப்பிலை- 1 கொத்து
சர்க்கரை- 50g
புளி- 75g
உப்பு- தேவையான அளவு
மிளகாய் தூள்- ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதை அப்படியே தனியாக எடுத்து வைக்கவும். அடுத்து கடாயில் கடலைஎண்ணெய் ஊற்றி சூடான பிறகு பட்டை, ஏலக்காய், அன்னபூர்ணா இலை, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதனிடையே புளியை தண்ணீரில் கரைத்து புளி தண்ணீரை கடாயில் ஊற்றி உப்பு, சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை உருகியவுடன் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும்படி நன்கு வதக்கவும். இப்போது வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு கலந்துவிட 5 நிமிடங்களில் ஜாம் பதத்திற்கு வந்துவிடும். அவ்வளவுதான் சுவையான சீனி சன்பல் தயார்.