தேவையான பொருட்கள்:
சிக்கன் – 1 1/2 கிலோ
எண்ணெய் – 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (துண்டுகளாக்கப்பட்டது)
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
தயிர் – 250 கிராம்
வெள்ளை மிளகுத் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பிரஷ் க்ரீம் – 150 மிலி
வெண்ணெய் – 50-100 கிராம்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும். பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். அடுத்து பச்சை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு, சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 4-5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். பிறகு சிறிது 3 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
பின் அடுப்பை அணைத்துவிட்டு, 2 நிமிடம் கழித்து, தயிரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும். அடுத்து அதில் வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் பிரஷ் க்ரீம்மை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும். பின்னர் வெண்ணெயை சேர்த்து கிளறி, கிரேவி சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா தயார்.