இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இங்கிலாந்து 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் யசஸ்வி ஜெய்ஸ்வால் 118 ரன்களும், ஆகாஷ் தீப் 66 ரன்களும், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் தலா 53 ரன்களும் குவித்தனர். இந்திய அணி 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி வெற்றிக்காக 374 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலை ஏற்பட்டது. நேற்றைய மூன்றாம் நாள் முடிவில் அந்த அணி 50 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது. இன்று 4ஆம் நாள் தொடக்கத்திலேயே பென் டக்கெட் 54 ரன்களுக்கும், ஆலி போப் 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இவர்களின் விக்கெட்டுகளை முறையே பிரசித் கிருஷ்ணா மற்றும் முகமது சிராஜ் கைப்பற்றினர்.
தற்போது இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவதால், இந்திய அணி வெற்றி நெருங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். போட்டி வெற்றியை நோக்கி இந்திய அணி உறுதியுடன் பயணிக்கிறது.