தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரஜினிகாந்தின் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கிறது. நேற்று (ஆகஸ்ட் 2) நடைபெற்ற இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத். படத்தில் இந்திய சினிமாவின் பல பிரபலங்கள் ஒருங்கிணைந்துள்ளனர். நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், அமீர் கான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரஜினியின் திரைத்துறை பயணத்தின் 50வது ஆண்டில் வெளிவரும் இப்படத்துக்கு, ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனை 1000 கோடிகள் வசூலிக்க வைக்கும் திட்டத்தில் அவரது ரசிகர்கள் இறங்கியுள்ளனர். தமிழகமெங்கும் உள்ள ரஜினி ரசிகர் மன்றங்கள் இணைந்து 1000 கிடா வெட்டி, பொதுமக்களுக்கு அன்னதான அசைவ விருந்து அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்தப் படமும் 1000 கோடி வசூலை எட்டவில்லை. ஆனால், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்கள் இந்த இலக்கைத் தாண்டியுள்ளன. ரஜினியின் ‘கூலி’ இப்படத்தை அடுத்த வெற்றிக் குதிரையாக திரையுலகம் பார்த்து வருகிறது.
இந்திரையில் திரைத்துறையினர் கூறுவதாவது, “ரஜினி ரசிகர்கள் செய்தாலும் செய்வார்கள்; இப்படமே 1000 கோடி வசூல் செய்தால், அவர் 50 ஆண்டு சாதனையை தங்கக் கல்லில் பதிக்கக்கூடிய வெற்றியாக அமையும்” என்கிறார்கள்.