வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு இந்தியா மறைமுக நிதியுதவி செய்துவருவதாக அமெரிக்கா கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து அதிக எண்ணிக்கையில் எண்ணெய் மற்றும் ராணுவ உபகரணங்களை வாங்கி வருவதால், இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வரி ஆகஸ்ட் 7 முதல் அமலில் வரும் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளதாக வந்த தகவல்களை மத்திய அரசு மறுத்தது. வழக்கம்போல் எண்ணெய் கொள்முதல் நடைமுறையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டிரம்பின் ஆலோசகர் ஸ்டீபன் மில்லர், இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனுக்கு எதிரான போருக்கு நிதியளித்து வருவதாக கூறியுள்ளார்.
அதே நேரத்தில், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் இந்தியா சீனாவுடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் அவர் விமர்சித்தார். இதன் பின்னணியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே நாட்டு நலன்கள் மற்றும் பொருளாதார கணக்குகள் மோதும் நிலைக்கு வந்துள்ளன.
இது நியாயமா இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், வாசகர்கள் கருத்துக்களும் பரபரப்பாகவே பதிவாகியுள்ளன. பலர் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். சிலர் இந்தியா தனது பொருளாதார நலனுக்காக செயற்படுவது நியாயம் எனவும் கூறுகின்றனர்.