புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை திருச்சி எம்.பி. துரை வைகோ சந்தித்தார். அப்போது ரஷியாவில் சிக்கியுள்ளவர்களை மீட்க வலியுறுத்தினார்.
ரஷியாவில் சிக்கியுள்ள மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட இந்தியர்களை மீட்பது தொடர்பாக 68 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார்.
அந்த கோரிக்கை கடிதத்தில்,”126 இந்தியர்களை உடனே மீட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில்,”ரஷியாவில் வலுகட்டாயமாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணன் உள்ளிட்ட 126 பேரை உடனே மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளார்.
15 கட்சிகளை சேர்ந்த 68 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை வழங்கி பிரதமர் மோடியிடம் துரை வைகோ எம்.பி. கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.