தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய படங்களை பதிவேற்றம் செய்யும் முக்கிய அட்மின் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை கேரள போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில வருடங்களாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களிலேயே பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் விவரங்களைக் கண்டுபிடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டாலும், அதன் முக்கிய நிர்வாகியை மதுரையில் கேரள போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த சில ஆண்டுகளாக திரையரங்கில் 5000 ரூபாய்க்கு சிறிய கேமரா மூலம் குருவை படம் எடுத்த புதிய படங்களின் வீடியோக்களை பதிவு செய்து வந்தது தெரியவந்தது.
கோடிக்கணக்கில் செலவு செய்து படம் எடுத்து செத்து மடியும் நிலையில் தயாரிப்பாளர்கள் ஒரு பக்கம் , இன்னொரு பக்கம் கைதானவர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெறும் 5000 ரூபாய்க்கு படங்களை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த நபரிடம் நடத்தப்படும் விசாரணையில் தமிழ் ராக்கர்ஸ் படக்குழுவினர் அனைவரும் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.